15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்” - சென்னை காவல் ஆணையர்

 சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவலர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறும் போது, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

முககவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக கடந்த 8 ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் 6000 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். வேளச்சேரி வாக்குசாவடி எண் 92ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பிற்காக துணை ராணுவம், சிறப்பு காவல்படை, உள்ளூர் 

வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலர்களிடம் இருந்து மொபைல் பார்ட்டி ஊழியர்கள் பெற்று கொண்டு செல்வது வழக்கம். அதில் சில ஊழியர்கள் செய்த தவறு. இது சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை. ஒரு நாளைக்கு 13 முதல் 15 காவலர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சென்னையில் 8,500 காவல்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.” என்றார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னை காவல்துறையில் உள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவது நமது சமூக கடமை" என்றார்.
Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)