மகாராஷ்டிரா: ஆக்சிஜன் வாயுக்கசிவால் 11 பேர் உயிரிழப்பு

 


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 170க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் கூறியுள்ளது.

ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.