ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்


 தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கோரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அதன் படி தமிழகத்தில்  வரும் 10 தேதி முதல் அணைத்து வழிப்பாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க படும் என்று அறிவிக்க பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் வருகின்ற 14 ஆம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் வழிப்பாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பினால் புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகைகள் நடை பெறாத நிலை உருவாகும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு மறு பரிசிலினை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டு முழு ஊரங்கு காரணத்தனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. மேலும் புனித ரமலான் மாதத்திலும் பள்ளி வாசல்களில் தொழுகைகள் நடத்த முடியாமல் இஸ்லாமியர்கள் பெரும் சிரமத்து குள்ளாகி வந்தனர் . அதே போல் இந்தாண்டும் புனித ரமலான் மாதத்தில் இரவு நேர சிறப்பு தொழுகைகள் நடத்த முடியாமல் போய் விடுமோ என்கிற மன உலச்சளில் இஸ்லாமியர்கள் உள்ளனர். 

ஆகவே : இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் 30 நாட்கள் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி  வரை அனுமதி அளிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image