வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி

 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கையை ஏற்று 

வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி

திருச்சி

வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் 11.04.2020 ஞாயிற்றுக்கிழமை 

விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :

கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில்கொண்டு வழிபாட்டு தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டதை அடுத்து,  இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாதத்தில் இரவு சிறப்பு தொழுகையை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம்

இதனையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து தொடர்புகொண்டு வலியுறுத்தியதை அடுத்து,

நேற்று இரவு வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 10 மணிவரை அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் ஆகியோர் நேரில் சென்றும் மற்றும் தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து கோரிக்கை மனுவாகவும் அளித்தார்கள். கோரிக்கையை ஏற்று உரிய உத்தரவு பிறப்பித்த தமிழக அரசிற்கும், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.     பல ஆண்டுகளாக தமிழக அரசு ரமலான் காலத்தில் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் பச்சரிசி வழங்கி வருகிறது ஆனால் இவ்வாண்டு இதுவரை அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வில்லை. எனவே உடனடியாக அரசாணை வெளியிட்டு பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசியை வழங்கிட கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image