"இனி கார்ப்பரேட் கையில் கொரோனா தடுப்பூசிகள்” : 1000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதம்!

 இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வரும் சூழலில் நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக அதிரித்து வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்து 18வயதிற்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்தியில் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் நாடுமுழுவதுமே தடுப்பூசி தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை தரவேண்டிய மத்திய அரசு, மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக 3 வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் படி, முதல் 30 கோடி பேருக்கு மட்டுமே மத்திய அரசு இலவசமாக வழங்கும். அதன்பின்னர் மத்திய அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பெறும் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இப்படி, தடுப்பூசிக்கு மாநில அரசுகள் மானியம் அளிக்க முன்வராவிட்டால், அந்த சுமையை மக்கள் தலையில் வைக்கவே இந்த ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள். தற்போது, வரிகளை தவிர்த்து கோவிஷீல்டு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு டோஸ் 206 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கி வந்தது.

இதில் ஒரளவே லாபம் கிடைத்ததாக மத்திய அரசிடம், தடுப்பூசி நிறுவனங்கள் புலம்பியதையடுத்து, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தடுப்பூசி விற்பனை தாராளமயமாக்கப்பட்டுள்ளது மத்திய மோடி அரசு. இதன் விளைவாக, ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் என்றால், ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எட்டா கனியாகும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து தங்களுடைய மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசோ, கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கி தடுப்பூசி விலை எகிற வைத்துள்ளது.

Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image