என்ன தான் நடக்கிறது கோவை அதிமுகவில் ? S.P.வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!

 


சிட்டிங் எம்எல்ஏக்கள் எல்லாம் கடந்த ஒரு வருடமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள், அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.

பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்துதான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார். வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க உதவ வேண்டும் என்ற அசைண்மென்டை நவம்பர் மாதமே கொடுத்திருக்கிறது, ஆனால் இவர் யாரிடமும் சொல்லாமல் மறைமுகமாக வானதிக்காக வேலை பார்த்து இருக்கிறார்.

அதைப்போல வடக்கில் இருந்த PRG அருண்குமாரை காலி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து அவரை கவுண்டம்பாளையத்திற்க்கு மாற்றி விட்டார். அங்கே தன்னுடைய ஆதரவாளர் சந்திரசேகரை வேட்பாளராக அறிவிக்க போகிறேன் என்று கூறி அவரை கீழே வேலை செய்ய சொல்லியிருக்கிறார். சந்திரசேகர் பல கோடிகளை தொகுதியில் செலவு செய்து வேலைகளை 6 மாதத்திற்கு மேலாக செய்து வந்திருக்கிறார். ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு செலவுகள் மட்டுமே பல கோடிகள். கீழே இருந்த கட்சிகாரர்கள் அனைவரும் சந்திரசேகர் ஆதரவாளர்களாக மாற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அம்மன் அர்ஜனன் ஆதரவாளர்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது நடத்திய போராட்டத்தால் தான் அவருக்கு கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வேலுமணியின் திட்டம் அவரை கழட்டி விடுவதாக இருந்திருக்கிறது நான் அம்மா காலத்து ஆள் சீட் இல்லையென்றால் சுயேட்சையாக போட்டியிட்டு கோவை தெற்க்கில் வானதியை தோற்க்கடிப்பேன் என்று பேசியதை கேட்டு ஷாக் ஆன வேலுமணி வடக்கு தொகுதியை கொடுத்திருக்கிறார். 

வடக்கு தொகுதிக்கு புதிதானவர் அம்மன் அர்ஜனன், ஏற்கெனவே நிர்வாகிகள் எல்லாம் சந்திரசேகருக்கு தான் சீட் என்று எண்ணி கொண்டிருந்த போது பெரிய ஏமாற்றம் அடைந்திருககின்றனர். அம்மன் அர்ஜனனுக்கு ஆதரவாக வடக்கு தொகுதி சந்திரசேகர் ஆதரவு நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்வது  இல்லையாம் இதற்கு பின்னால் வேலுமணியின் கட்டளை இருக்கிறது போல, சுயேட்சையாக நிற்பேன் என்று அவர் கூறியதால் அவரை பழி வாங்க முடிவு செய்து விட்டாராம்.

அம்மன் அர்ஜுனன் தன்னுடைய தெற்கு தொகுதி ஆதரவாளர்களை தினமும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்.

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக லோக்கல் அதிமுக நிர்வாகிகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக மேலிடத்தில் வைக்க அவர்கள் தொடர்பு கொண்டு பேசியது வேலுமணியிடம். மிரட்டல் தொனியில் வந்த அந்த அழைப்பில் "நீங்கள் தோற்றாலும் பரவாயில்லை , வானதி ஜெயிக்க வேண்டும்" இல்லையென்றால் உங்களுக்கு IT ரைடு வரும் என்ற உத்தரவு வந்திருக்கிறது.

நேற்று வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தெற்கு தொகுதி நிர்வாகிகளை தனியாக அழைத்து பேசியிருக்கிறார் அவர்களிடம் அவர் கூறியது, அம்மன் அர்ஜனனுக்கு வேலை செய்ய வேண்டாம், தெற்க்கில் வானதிக்கு உதவுங்கள் என்று பேசியிருக்கிறார்.

நீங்கள் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்க்காக எங்களையும் அடிமையாக இருக்க சொல்லாதீர்கள், அம்மா மோடியா, லேடியா என்று கேட்டவர், என்ற பதிலை கேட்டு அன்பரசனும் ஷாக் ஆகிவிட்டார்.

வேலுமணியால் கோவை அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்