எத்தனை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போட்டி? : மக்கள் கொண்டாடும் வேட்பாளர்கள்! -DMK
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ளது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், பெண்கள், பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முனைவர்கள் :
1. திருக்கோவிலூர் - முனைவர். க.பொன்முடி MA., Phd.,
2. மதுரை மத்திய - முனைவர். பழனிவேல் தியாகராஜன் MS., MBA.,Phd.,
3. திருச்சி கிழக்கு - முனைவர். இனிகோ இருதயராஜ் MSW.,Ph.D
4. திருவிடைமருதூர் (தனி) - முனைவர். கோவி.செழியன் MA.,BL.,Phd.,
5. கெங்கவல்லி (தனி) - முனைவர் திருமதி. ஜெ. ரேகா பிரியதர்ஷினி MA., MPhil.,Phd.,
மருத்துவர்கள்
1. ஆலங்குளம் - Dr. பூங்கோதை ஆலடி அருணா MBBS.,
2. புதுக்கோட்டை - Dr.முத்துராஜா MBBS.,
3.இராசிபுரம் (தனி) - Dr. மா.மதிவேந்தன் MBBS.,MD.,
4. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண் MBBS., MS.,
5. விழுப்புரம் - Dr.ஆர்.லட்சுமணன் MBBS., D. Ortho.,
6. மைலம் - Dr.இரா. மாசிலாமணி MBBS.,
7.பாப்பிரெட்டிப்பட்டி - Dr. எம். பிரபு ராஜசேகர் MBBS.,
8. ஆயிரம் விளக்கு - Dr. நா. எழிலன் MBBS.,MD.,
9. பொள்ளாட்சி - Dr.வரதராஜன் MS (Ortho).,
வழக்கறிஞர்கள் :
1. அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன் BABL.,
2. சங்கரன்கோவில் (தனி) |ஈ.ராஜா B.Com., MA.,BL.,
3. ஒட்டப்பிடாரம் (தனி) - எம்.சி.சண்முகய்யா BA., LLB.,
4. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன் BABL.,
5. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் BSC., BL.,
6. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் BCom., BL.,
7. திருமயம் - எஸ்.இரகுபதி BSC.,BL.,
8. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை BSc.,BL
9. ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன் BA.,BL.,
10. திருவிடைமருதூர் (தனி) - கோவி.செழியன் MA.,BL.,Phd.,
11. நன்னிலம் - எஸ்.ஜோதிராமன் B.SC., BL.,
12. சீர்காழி(தனி) - மு.பன்னீ ர்செல்வம் MA.,BL.,
13. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் BSC.,BL.,
14. பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் BE.,MA., BL.,
15. கிருஷ்ணராயபுரம் (தனி) - திருமதி. க. 14. சிவகாமசுந்தரி MA.,BL., B.Ed.,
16. வேடசந்தூர் - எஸ். காந்திராஜன் BA.,BL.,
17. பழனி - ஐ.பி.செந்தில்குமார் MA.,BL.,
1.8 மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் BSc., BL.,
19.சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன் BA.,BL.,
20.பாலக்கோடு - பி.கே.முருகன் BA.,BL.,
21.காட்பாடி - துரைமுருகன் MA.,BL.,
22. காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,
23. பூவிருந்தவல்லி (தனி) - ஆ.கிருஷ்ணசாமி BA.,BL.,
24. மாதவரம் - எஸ்.சுதர்சனம் MA.,BL.,
25. எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன் BA.,BL.,
26. திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி MA.,BL.,
27. பெரம்பூர் - ஆர்.டி.சேகர் BCom.,BL.,
28. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர் MCom.,BL.,