மக்கள் நீதி மய்யம் உடன் எஸ்டிபிஐ கட்சியினர் ஆலோசனை!

 மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் எஸ்டிபிஐ கட்சியின் நிஜாம், ராஜா முகமது, அபுதாகீர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்தனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. மேலும் தங்கள் கூட்டணியில் வருகின்ற கட்சிகளை வரவேற்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.