சுகாதாரச் சீர்கேட்டால் சின்னமனூர் நகராட்சியில் கண்ணாம்பாள் கார்டனுக்கே இந்த அவல நிலையென்றால்??சின்னமனூர் நகராட்சியின் நிலை??

 தேனிமாவட்டம்,சின்னமனூர் நகராட்சியில், பத்திரப்பதிவு அலுவலகம்,பதிவு எழுத்தர்அலுவலங்கள்,வணிகவாளகங்கள்,திருமணமண்டபம் மற்றும் குடியிருப்புகள் என பரபரப்பான, பிரபலமான, பிரதானசாலையிலுள்ள கண்ணம்பாள்கார்டன் பகுதியில் கடந்த இருபது நாட்களுக்கு மிகாமல் தேனியிலிருந்து சின்னமனூர் செல்லும் பிரதான பைபாஸ் சாலையின் இடதுபுற சாலையோரத்தில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்தாமலும், சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்தினரால் கண்டு(ம்) கொள்ளாத அலட்சியத்தாலும் இவ்விடத்தில் குப்பைகள் தேக்கமடைந்து  இருப்பதால் சுகாதாரச் சீர்கேட்டோடு,நோய்த் தொற்று ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.

இவ்வாறானச் சுகாதாரச் சீர்கேட்டால்,வேறொரு புதிய நோய்த்தொற்று ஏற்பட்டு அந்த நோய்த் தொற்றிற்கு அரசு பெயர் வைக்கும் முன்பு சம்பந்தபட்ட இடத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டுமெனவும், மேலும்,சின்னமனூர் நகராட்சியில் முக்கியப்பகுதியாக வளர்ந்து வருகின்ற, பிரபலமான,பலம் வாய்ந்த,கண்ணாம்பாள் கார்டனுக்கே இந்த நிலையென்றால், சாமானியர்களின் நிலையானது என்னவாகும்??என சமூக நல ஆர்வலர்கள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர்.-நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
Image
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!
Image
வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகிறதா ?அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
Image
மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
Image