குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவி கைது;ஐநா சபை கண்டனம்..

 


தலைநகர் டெல்லியில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்தது. இதில் அப்பல்கலைக்கழக மாணவி சர்கா இந்த சட்டத்திற்கு எதிராக போராடியதால், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக , வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த மாணவி கைது செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளதால், இதன் காரணமாக அந்த மாணவியை விடுதலை செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். அவர் சிறையில் இருந்தபோது ,அவரது உடல்நிலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல போராட்டத்திற்குப் பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் காரணமாக மாணவி சஃபூரா சர்கா கைது செய்யப்பட்டது குறித்து ,ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விவாதித்தது.

ஐ.நா சபை கூறுகையில் , மாணவி கைது செய்யப்பட்டதை ‘மனித அடிப்படை உரிமைகளில் மீறல் ‘என்று தெரிவித்தது. 

மக்களின் சுதந்திரத்தை பறிப்பது அவர்களின் உரிமையை முடக்குவதற்கு சமமாகும் ,என்று ஐநா சபை தெரிவித்தது. 

இந்தக் கருத்தைப் பற்றி பாதிக்கப்பட்ட மாணவி கூறும்போது, ‘இது என்னுடைய பெரிய பாக்கியமாக கருதுகிறேன்’. எனக்காக போராடிய மனித உரிமை ஆணையத்திற்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் .