தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தைகள்!

 


வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சங்கேத வார்த்தைகளைப் பயன்டுத்தி பணப் பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சங்கேத வார்த்தைகளைப் பயன்டுத்தி பணப் பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல்வாதிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரசார விவாதங்கள் வாக்குறுதிகள் என தமிழகம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறக்கின்றது.

அதேபோல தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதையும், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதையும் தடுக்கும் பணிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக பணியாற்றி வருகினற்னர். ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏராளமான விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சென்னையில், தேர்தல் பறக்கும் படை மூலம் ஏறக்குறைய ரூ.20 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 80 இடங்களில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் இடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகம் தொகுதியில் 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வரையிலும், அண்ணாநகர் தொகுதியில் 5 கோடியே 31 லட்சம் ரூபாய் வரையிலும், வேளச்சேரியில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் வரையிலும் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல்வேறு உத்திகளை அரசியல் கட்சியினர் கையாண்டு வருவதாக சொல்லப்படுகின்றது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், ஒரு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வந்ததா என்பதை அறிய சங்கேத வார்தைகளைப் பயன்படுத்துவதாக சொல்லப்படுகின்றது.

இந்த வகையில், மீனா, அல்லது கருவாடா என்று கேட்கின்றனராம். ‘மீன்’ என்றால் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், ‘கருவாடு’ என்றால் பணம் கொடுக்கப் படவில்லை என்றும் அர்த்தமாம். அதேபோல, மற்றொரு கட்சி வடை என்ற சங்கேத வார்த்தையைப் பயன்படுத்தி பணப் பட்டுவாடா சொய்கின்றதாம்.

அதன்படி, ‘வட போச்சு’ என்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றும், ‘வடை போகவில்லை’ என்றால் இன்னும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்றும் அர்த்தமாம்.

தேர்தலுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில் இது போன்ற சங்கேத வார்த்தைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்