நாகூர் தர்கா, நாகநாத சாமி கோயில், வேளாண்கண்ணி மாதா ஆலையம்: ஒரேநாளில் வழிபாடு செய்த சசிகலா

 



சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாகூர் தர்கா, நாகநாத சுவாமி ஆலையம் மற்றும் வேளாங்கண்ணி மாதா ஆலயம் ஆகியவற்றில் வழிபாடு செய்தார்.

சொகுசு காரில் நாகூர் நாகநாத சுவாமி ஆலயம் வந்தடைந்த அவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்ட செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன் வரவேற்றார். தொடர்ந்து ராகு சன்னதியில் ராகு தோஷம் (நாக தோசம்) நீங்க பூஜை ஹோமங்கள் செய்து சசிகலா வழிபட்டார். பசுபதி குருக்கள், மணிகண்டன் குருக்கள் ஆகியோரின் சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற சசிகலா, நாகநாத சுவாமி, திருநாகவல்லி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.

தொடந்து கோவிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, வேண்டுதல் காரணமாக தரிசனம் செய்ய நாகூர் நாகநாத சுவாமி ஆலயம் வந்தேன். எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணத்தோடு வந்தேன் என்று தெரிவித்தார். மேலும்,சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மௌனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்

நாகநாத கோயிலை தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா ஆலயம் மற்றும் நாகூர் தர்காவில் வழிபாடு நடத்தினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா