திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

 



நத்தம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே ரகளை வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஆண்டி அம்பலம். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஷாஜகான் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு 2110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த முறையும் திமுக தலைமை ஆண்டி அம்பலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு திமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நத்தம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரத்தினகுமார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார். இவரும் நத்தம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் திமுக தலைமை இவரது மனுவை நிராகரித்து விட்டது.

இதனால் கட்சியின் மீது ஆத்திரமடைந்த ரத்தினகுமார், இன்று நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கி மேடையில் ஏற ஆரம்பித்தவுடன் ரத்தினகுமாரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆண்டி அம்பலத்தின் ஆதரவாளர்களுக்கும் ரத்தினகுமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு நடந்தவுடன் கூட்டத்திலிருந்த சேர் நாற்காலிகள் உள்ளிட்டவை பறக்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து மண்டபத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!