மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் நிறுவனத்தின் டிரைவர் வீட்டில் ஐடி ரெய்டு; வைக்கோல்போருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பறிமுதல்

 


திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அதிமுக எம்.எல்.ஏ.ஆர்.சந்திரசேகர் இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுனர்கள் பணியாற்றும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி கோட்டைப்பட்டி சேர்ந்த ஆனந்தன் என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

எம்.எல்.ஏ தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கப்பாண்டியன் என்பது வீட்டிலும், வீர கோவில்பட்டியில் எம்எல்ஏவுக்கு நெருக்கமானவராக கருதப்படுவரின் கல் குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் மூன்று இடங்களில் பணம் ஏதும் கைப்பற்றப் படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமான வரி துறை இணை இயக்குனர் மதன் குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலிருந்து வைக்கோல் போரில் இருந்து 500 ரூபாய் கட்டுகளை சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மட்டும் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image