நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் குறித்து சி.டி. ரவி விளக்கம்

 


பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். அதற்கு முன்பே வேட்பு மனுதாக்கல் செயததற்கு நல்ல நேரம் என்பது மட்டும் தான் காரணம்.5-வது முறையாக இதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் நெல்லையில் வேட்புமனுத்தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமை இறுதி செய்த பின்னரே மாநில தலைமை பட்டியல் வெளியிடப்படும். நாளைக்குள் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பாஜக மாநிலத் துணைதலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் “பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். அதற்கு முன்பே வேட்பு மனுதாக்கல் செயததற்கு நல்ல நேரம் என்பது மட்டும் தான் காரணம்.5-வது முறையாக இதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். 

தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பேன். அதிமுகவினர் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள். பிரதமர் நரேந்திரமோடி, நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பு நயினார் நாகேந்திரன் வேட்புமனுத்தாக்கல் செய்தது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி ‘மனுத்தாக்கல் குறித்து நயினார் நாகேந்திரன் எங்களிடம் தகவல் தெரிவித்தார். 

அவர் ஒரு முக்கியத்தலைவர், பா.ஜ.க குழு உறுப்பினர்களில் ஒருவர். இன்று நல்லநாள் என்பதால் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் எங்களிடம் தகவல் தெரிவித்தார்” என்றார்.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு