சுந்தர்.சி மீது வருத்தத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள்ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் குஷ்புவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் அவரது கணவர் சுந்தர்.சி. ஆனாலும் அவர் மீது ஏகத்துக்கும் அதிருப்தியில் இருக்கிறார்கள் அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள்.

தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவைப் பார்வையிட தினமும் காலையில் ஒரு விசிட் அடிக்கிறார் சுந்தர்.சி. பணிக்குழுவில் இருக்கும் நிர்வாகிகளைப் பார்த்து, "மேடம் (குஷ்பு) எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்! அதற்குத் தகுந்த மாதிரி பிரச்சாரத்தை நீங்க முன்னெடுக்க மாட்டேங்கிறிங்க. ஏனோ தானோ என்று இருக்கீங்க. இப்படியிருந்தா எனக்குப் பிடிக்காது" என்று கடிந்து கொள்கிறாராம்

இதனால், பா.ஜ.க. தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிர்வாகிகள் முகம் சுழிக்கின்றனர். மேலும், குஷ்பு பிரச்சாரம் செய்வதற்கு பெரிய வாகனம் வேண்டும் என சுந்தர்.சி. சொல்லியிருக்கிறார். அதற்கு, "இப்போ இருக்கிற வாகனமே நல்லாதானே இருக்கு. அது வேண்டாம்னா… நீங்க தான் சார் ஏற்பாடு செய்தாகனும். நாங்க எங்கே போறது?" என்றும் சொல்லியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

தாமரையில் குஷ்பு போட்டியிட்டாலும் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போலத்தான் பா.ஜ.க. தொண்டர்களின் தேர்தல் வேலைகள் இருக்கின்றன. இதற்கிடையே, தொகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் பெரும்பாலும், துறைமுகம் பகுதியில் போட்டியிடும் வினோஜ்.பி செல்வத்திற்கு வேலை செய்யச் சென்றுவிட்டதாக பா.ஜ.க.வில் பேசப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)