தவறி விழுந்த சிறு குழந்தை உயிர் பிழைத்த காட்சி... வெளியான சிசிடிவி காட்சி

 


சாலையில் ஓடுகிற காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்து. சுற்றிலும் பரபரப்பாக வாகனங்கள் வேகமாக பாய்ந்து வந்த நிலையில் மிரண்டு நின்ற குழந்தை தன்னை சாலையில் தவறவிட்ட தாயை தேடி அந்தக் காரை பின் தொடர்ந்து ஓடியது.

இதற்குள் காரில் இருந்த குழந்தை தவறி விழுந்ததை கவனித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படி நிறுத்தினர்.

சாலையின் நடுவே நடந்து சென்ற குழந்தையை, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள, குழந்தையைக் கீழே விழுந்ததை கண்டு பதறி தாய் ஓடி வந்து தூக்கி சென்றார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சியை ஷிரின்கான் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டால் இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.