அ.தி.மு.க வேட்பாளர்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் : கதி கலங்கும்வேட்பாளர்

 



பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றவர்கள் முஸ்லிம் தொடர்பாக தவறாக பேசி வருவதாகவும், அவர்களை கண்டிக்காமல் பா.ஜ.க -வுடன் கூட்டணி வைத்து இருக்கிறீர்களே என வாக்கு சேகரிக்க வந்த திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.ரமணாவை கேள்வியால் துடைத்தெறிந்த மசூதியின் தலைவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.ரமணா நேற்று திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் வாக்கு சேகரிக்க வந்தபோது, இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பரப்பிவரும் பொன்.ராதாகிருஷ்ணன் எச்.ராஜா போன்ற பாஜகவினர் நீங்கள் கூட்டணியில் வைத்துள்ளீர்களே என அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.ரமணவிடம் மசூதியின் தலைவர் கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு இருந்த ஒருவர் இங்கே இது குறித்து பேச வேண்டாம் என சொல்லும் போது பி.வி.ரமணா அவர் பேச்சை தடுத்து முஸ்லிம் தலைவரை பேச அனுமதித்தார். தொடர்ந்து பேசிய முஸ்லிம் தலைவர் இத்தகைய அவதூறுகளை பேசிவரும் நபர்களும் அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும் பா.ஜ.கவினர் நபர்கள் மீது அ.தி.மு.க கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்

வாட்ஸ் அப் குழுக்களில் இஸ்லாமியர்கள் குறித்த தரக்குறைவாக வரும் வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அ.தி.மு.க கட்சியானது வளர்ந்த கட்சியாகும். ஆனால் இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளிர்களே, மசூதி தலைவர் கூறியதை கேட்டு அறிந்த அ.தி.மு.க வேட்பாளர் அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.ரமணா இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவில் நேரடியாக புகார் அளித்து இதுபோன்ற வீடியோக்களை நீக்குவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன் பின்னர் ஆள விட்டா போதும் என அவர்கள் கலைந்து சென்றனர்.

அதுமட்டுமல்லாது அம்பேத்கர் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் 75 மேற்பட்ட குடும்ப மக்கள் வசதி வருகின்றனர். அவர்கள் கடந்த 2011 ஆண்டு அமைச்சராக இருந்த பி.வி.ரமணா வெற்றி பெற்ற உடன் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் அம்மக்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அவர் வெற்றி பெற்றவுடன் அந்த பக்கம் திரும்பி பார்க்கவில்லை என்றும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று கடம்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.ரமணா அவர் வெண்மனம்புதூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வருவதை தகவல் அறிந்த அக்கிராம மக்கள் கருப்பு கொடி காட்டி அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பை அறிந்த பி.வி.ரமணா கிராமத்திற்கு உள்ளே செல்லாமல் திரும்பிச் சென்றார்.

அதேப்போல், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பிரச்சாரத்திற்காக வந்த சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் எம்.எல்.ஏவை கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் கட்டித் தரக்கோரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கடந்த சில தினங்களாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது பிரச்சாரத்தின் போது இது நிகழ்ந்ததால் அ.தி.மு.கவினர் மிகுந்த தர்மசங்கடத்தில் இருந்தனர். தமிழகம் முழுவதும் இதே நிலைமை நீடிப்பது அ.தி.மு.கவினரும், எடப்பாடி பழனிசாமியும் கலத்தில் உள்ளன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)