’’அமைச்சராகவே இருந்தாலும் அடைமொழி பெயர் வச்சா ஆதாரத்த காட்டித்தான் ஆகணும்’’ என்ற பழமொழிக்கு ஏற்ப திருச்சியில் வேட்புமனு பரிசீலனையில் பெயரால் சலசலப்பு ஏற்பட்டது.

 




தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. திருச்சி கிழக்குத் தொகுதியிலும் வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது தற்போதைய சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய வெல்லமண்டி நடராஜன் கடந்தமுறை போட்டியிட்ட கிழக்கு தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய வேட்புமனுவில் வெல்லமண்டி நடராஜன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெல்லமண்டி என்பது என்.நடராஜன் அவர்களுடைய அடைமொழி பெயராக மக்கள் அழைத்தனர். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் என்.நடராஜன் என வேட்புமனு தாக்கல் செய்த வெல்லமண்டி நடராஜன், தற்போது வெல்லமண்டி நடராஜன் என தாக்கல் செய்திருப்பது பெயரில் பிழை இருப்பதாக கூறி அங்கிருந்த சக வேட்பாளர்கள் அதுகுறித்த கேள்வியை தேர்தல் அலுவலரிடம் எழுப்பினர்.

தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சார்பில் பங்கேற்ற அவரது வழக்கறிஞர், வெல்லமண்டி நடராஜன் என்ற பெயருக்கான வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை காண்பித்து, உரிய ஆதாரங்களுடன்தான் வெல்லமண்டி நடராஜன் என வேட்புமனுவில் பெயர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து சலசலப்பு நின்றது.

ஆயிரம்தான் அடைமொழி வைத்தாலும், அமைச்சராகவே இருந்தாலும் ஆதாரம் காட்டியே ஆகணும் என்ற ஒரு நிலையை வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையில் ஏற்பட்ட இந்த சலசலப்பு உணர்த்தியது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்