ஐநா தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது சரியல்ல - இடதுசாரிகள்


 ஐநாவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஐநாவில் நடைபெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்தது மூலம் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் போனது சரியானது அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பரப்புரைக்கு இடையே புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்