மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்

 


தமிழக சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  சிறிய கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன்படி மக்கள்நேய மனித கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் மமக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தொகுதியில் கத்தரிக்கோல் சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

அதேப்போன்று மை இந்தியா கட்சிக்கு சிசிடிவி கேமிரா சின்னமும், இந்திய கனசங்கம் கட்சிக்கு வெண்டைக்காய் சின்னமும், மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு தலையணை மற்றும் நாம் இந்தியா நாம் இந்தியர் கட்சிக்கு அன்னாசி பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு