தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பை நடத்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் பிரதானமாக திமுக - அதிமுக கூட்டணி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும், யார் முதல்வராக வருவார் என்று இக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 161 - 169 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. திமுக கூட்டணி 43 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 53 - 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் இக்கூட்டணி 30.6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கணிப்பு தெரிவிக்கிறது.

முதல்வராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று 29.7 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். 48 சதவீதம் பேர் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கருத்து கூறியுள்ளனர். இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 2 - 6 தொகுதிகளிலும் அமமுக கூட்டணி 3 - 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)