சின்ன விஷயம் விடுங்க சார்... அ.தி.மு.க பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் தலைவர் படம்

 


திருநெல்வேலியில் அ.தி.மு.க தேர்தல் பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐ.யூ.எம்.எல் கட்சித் தலைவர் படம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ந்தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டங்கள் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் அரசியல் களைகட்டி வருகிறது. 

குறைந்த அவகாசமே உள்ளதால் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கான வியூகத்தை வகுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொதுகூட்டங்களில் நிகழ்வு குறித்த தகவல்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். 

கூட்டணி கட்சித் தலைவர்கள் படங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கிசுப்பையா போட்டியிடுகிறார். 

தொகுதி முழுவதும் அறிமுகமான நபராக கருதப்படும் அவருக்கு மக்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொகுதியில் செயல்வீர்கள் கூட்டம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்காக மேடையில் பிளக்ஸ் மாட்டப்பட்டிருந்தது. அதில் சமுதாய தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெற்றுள்ளது. இத்துடன் பாஜகவின் மோடி, அமித்ஷா, ஜேபிநட்டா, தமிழக தவைர் எல்.முருகன், பாமக தலைவர் ராமதாஸ், ஜிகே.வாசன், ஜாண்பாண்டியன் படங்கள் இடம் பெற்றுள்ளன.

 இந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் படமும் இடம் பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. 

கடையநல்லூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக அணியிலேயே இருந்தது. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையிலும் படத்தில் இருப்பவர் குறித்து அறியாத நிலையில் இரத்தத்தின் இரத்தங்கள் காதர் மைதீன் படத்தை பயன்படுத்தியுள்ளனர்.

1957 தேர்தலில் தமிழகத்தில் எதிர் கட்சியாக இருந்தது முஸ்லீம் லீக் கட்சி. தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக பிளவு பட்டு போயுள்ளது. திராவிட கட்சிகளின் ஆதரவிலேயே இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் உள்ளன. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் படத்தை போட கேட்டுகொண்டோம். 

பிளக்ஸ் அடித்த நிறுவனம் தவறுதலாக காதர் மைதீன் போட்டு விட்டனர். ஏதோ இஸ்லாமியர்)படம் போட்டிருக்கோம்ல.. விடுங்க சார்.. இதெல்லாம் பெரிசா ஆக்காதீங்க என கூலாக சொல்லி சென்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)