கேட்டால் அடிப்பேன்” : பேட்டியின்போது செய்தியாளர்களை மிரட்டிய அராஜக அமைச்சர் !

 


தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் தமிழகம் முழுவதும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இரண்டு முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொகுதிக்கு எதுவும் செய்யாததால், மக்கள் இவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதை தெரிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி தலைமையிடம் கெஞ்சி தொகுதியை மாற்றிக் கொண்டு இந்த சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், சர்ச்சைப் பேச்சுக்குச் சொந்தக் காரராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, இன்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தை திறந்தபோது, செய்தியாளர்களை பார்த்து ‘சப்பென்று அறைந்துவிடுவேன்’ என மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்துள்ளார். அப்போது செய்தியாளர் ஒருவர் அ.ம.மு.க குறித்து கேள்வி எழுப்பினார்.


இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அ.ம.மு.க பற்றி கேள்விக் கேட்கக் கூடாது, அப்படி கேள்வி கேட்டால் சப்பென்று அறைந்துவிடுவேன்” என பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)