பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- கோவையில் கறுப்புக் கொடி- தாராபுரத்தில் கறுப்பு பலூன்கள்!

 


கோவை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்பு கொடி காட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தாராபுரத்தில் கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம், கேரளா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கோவை வருகை தந்தார். அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அனல் பறக்கும் தேர்தல் களம், சினிமா செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்..ஒன்இந்தியாவின் டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா