’எங்கள் ஓட்டு இல்லை’அமைச்சர் கே.சி. கருப்பண்ணனுக்கு இல்லை என ஈரோடு மாவட்ட கிராம மக்கள் அதிரடி
மக்கள் அதிருப்தி எந்த அளவுக்குப் போயிருந்தால் அதிமுக அமைச்சர் வேட்பாளர் பெயரைப்போட்டு ‘எங்கள் ஓட்டு இவருக்கு இல்லை’ என்று போஸ்டர் அடித்து ஓட்டியிருப்பார்கள்.

ஆம்!
எங்கள் ஓட்டு அமைச்சர் கே.சி. கருப்பண்ணனுக்கு இல்லை என்று ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் அதிரடி எதிர்ப்புக் காட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமத்தில் அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு 52 கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பணியை நிறுத்துமாறும் குடியிருப்பை வேறு இடத்தில் கட்டுமாறும் போராட்டம் வெடித்தன.
தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று கூறினர், இதனால் வருவாய் துறை தேர்தல் பிரிவினர் பேச்சு நடத்தினர், ஆனால் மக்கள் எதிர்ப்பு அடங்கவில்லை.
இதற்கு மூலக்காரணம் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பண்ணன் தான் காரணமென போராட்டம் நடத்தினர். ஆனால் இதையெல்லாம் ஆளும் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பவானி தொகுதியில் கருப்பண்ணன் மீண்டும் போட்டியிடுவதால், 52 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் பிரச்சாரத்துக்கு வர கூடாது என்றும் அவர் பணம், பொருள் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று மக்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.
மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கொண்டு வந்து விவசாயத்தை அழிக்கும் கருப்பண்னனுக்கு எங்கள் ஓட்டு இல்லை விவசாயக் நில மீட்புக் கூட்டமைப்பு 52 கிராமங்கள் என்ற பெயரில் ஸ்டிக்கர் அச்சிட்டு எல்லா இடங்களிலும் ஒட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஆளும் கட்சித் தரப்பில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.