உறுதிமொழி பத்திரம் எவ்வாறு வாசிப்பது; விழி பிதுங்கி நின்ற தேமுதிக வேட்பாளர்.!



அ.ம.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால் விழிபிதுங்கி நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
*

*சென்னையில் உள்ள திரு வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளராக சேகர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கூட்டணிக் கட்சிகளுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.*

*தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை அளித்து விட்டு உறுதிமொழி பத்திரம் வாசிக்கும் நேரமும் வந்தது. அதன் போது தேமுதிக வேட்பாளர் சேகர், உறுதிமொழி பத்திரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்க, அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதால் உடன் வந்த மாவட்ட செயலாளர் நிதானமாக உறுதி மொழியை வாசிக்க தொடங்கினர். அதனை வேட்பாளர் சேகரும் அப்படியே திருப்பி கூறினார்.*

*ஒரு விதமான பயத்திலும் வேட்பாளர் மனு தாக்கல் உறுதிமொழி பாத்திரம் வாசிக்கப்பட்ட நிலையில், விசாரித்த பின்னர் வேட்பாளருக்கு தமிழ் மொழி மட்டுமல்ல., எந்த மொழியும் படிக்க தெரியாது என்பது தெரியவந்தது.*

*படிக்க தெரிகிறதோ இல்லையோ மக்கள் பணியில் சிறந்து விளங்கி, மக்களின் மனதை புரிந்து கொண்டால் அதுவே, நாட்டின் எதிர் காலத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.*

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா