தமிழக அரசு மீது தேர்தல் ஆணையத்தில் மாலை முரசு தொலைக்காட்சி புகார்..

 


அரசு கேபிளில், மாலை முரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு இடைஞ்சல் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தேர்தல் ஆணையத்திற்கு, நடவடிக்கை கோரி கடிதம் எழுதியுள்ளது அந்த தொலைக்காட்சி நிர்வாகம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பை எடுத்திருந்தது மாலை முரசு தொலைக்காட்சி. அதை மார்ச் 25ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதிவரையான காலக்கட்டத்தில், சிறிது சிறிதாக வெளியிட திட்டமிட்டிருந்தது.

ஆனால், முதல் நாள் அந்தக் கணிப்பை வெளியிட்டதிலிருந்தே, அந்த தொலைக்காட்சி அரசு கேபிளில் சரியாக தெரிவதில்லை என்ற புகார் எழுந்தது. 

தங்களின் கருத்துக் கணிப்பு, தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பதால், அரசு தரப்பில் உள்ளவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக, அந்த தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.