அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் மறுப்புக்கு எதிர்ப்பு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா- எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள்

 


சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு சீட் கொடுக்காததைக் கண்டித்து அரசு வழக்கறிஞர் வைரமணி பதவியைத் துறந்துள்ளார். மேலும் அதிமுக மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான செந்தில்நாதன் எதிர்ப்பாளர்களையும் அமைச்சர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓராண்டிற்கு முன்பே அமைச்சர் ஜி.பாஸ்கரன் தேர்தல் பணிகளை தொடங்கினார். ஆனால் அவருக்கு திடீரென சீட் மறுக்கப்பட்டு, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னையில் இருந்து சிவகங்கை வந்த செந்தில்நாதனையும் அமைச்சர் ஆதரவாளர்கள் வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்தனர்.

இந்நிலையில் அமைச்சருக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எம்.வைரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் அளித்தார்.

மேலும் செந்தில்நாதன் 8 ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டச் செயலாளராக உள்ளார். அவரால் கட்சி பதவி இழந்தவர்கள், பதவி கிடைக்காதவர்கள், ஒப்பந்தம் பெற முடியாதவர்கள் ஆகியோரையும் அமைச்சர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இதனால் சிவகங்கை தொகுதியில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்