கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்: பரபரப்பு ஏற்படுத்திஉள்ளது!

 





உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபடுவதாக கூறி ஏபிவிபி அமைப்பினரால் அவர்களை ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

கடந்த வெள்ளி அன்று இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நடந்ததாக தெரிகிறது. கன்னியாஸ்திரிகள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் இந்த குற்றத்தை சுமத்தியவர்கள் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் மாணவரணி என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கன்னியாஸ்திரிகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது மாதிரியான மதமாற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடவில்லை என்பது உறுதியானதும் பயணத்தை தொடர அனுமதிக்க பட்டுள்ளனர். 

இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமித்ஷா முன்னெடுத்துள்ளார். 

“இது மாதிரியான சம்பவங்கள் தேசத்தின் உண்மையான முகத்தையும், பாரம்பரியத்தையும், சமத்துவத்தையும் சீர்குலைக்கின்றன. தனியொரு மனித சுதந்திரமே இது மாதிரியான சம்பவங்களால் பறிக்கப்படுகின்றன. அதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் தெரிவித்திருந்தார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)