ஆன்லைன் வீடியோ இன்டெர்வியூவின் போது உங்கள் மதிப்பைக் கூட்ட சில டிப்ஸ்!

 


கொரோனா பெருத்தொற்று சாத்தியமற்ற பல விஷயங்களை மாற்றியுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிவது, தொலைதூர வேலை, ஆன்லைன் இன்டெர்வியூக்கள் இப்பொது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டன. வேலைக்கான நேர்காணலுக்கு ஒருவர் கட்டாயம் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால் பெருந்தொற்று காரணமாக நீண்ட தூரம் பயணிக்க முடியாத நபர்களுக்கு ஆன்லைன் இன்டெர்வியூ மிகவும் வசதியான ஆப்ஷனாக மாறிவிட்டது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் இன்டெர்வியூ நடத்துவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. அந்த வகையில், உங்கள் கனவு வேலைக்காக ஆன்லைன் வீடியோ நேர்காணலுக்கு நீங்கள் தயாராக வேண்டியிருந்தால், காட்டாயம் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

1. சரியான இருப்பிடத்தைத் தேர்வு செய்யவேண்டும்:

உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு ஒரு பிரகாசமான இடத்தில் நீங்கள் உட்கார வேண்டும். உங்கள் வீட்டில் சூரிய ஒளி பிரகாசிக்கும் எந்த மூலையையும் நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம். அல்லது அறையில் உள்ள விளக்குகள் உங்கள் முகத்தை தெளிவாக காண்பிக்குமாயின் அந்த இடத்திலும் நீங்கள் அமர்ந்து நேர்காணலை மேற்கொள்ளலாம். அடுத்து, நேர்காணலின் போது உங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய கவனச்சிதறல் அல்லது தேவையற்ற ஒலிகள் இல்லாத இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். இடுப்பு வரை மட்டுமே நீங்கள் கேமராவில் காணப்பட வேண்டும்.

2. உங்கள் சாதனத்தை முன்பே சரிபார்க்கவேண்டும்:

உங்கள் சாதனத்தில் ஆடியோ, மைக்ரோஃபோன், கேமரா மற்றும் மிக முக்கியமாக, உங்கள் இன்டர்நெட் இணைப்பை சோதிக்கவும். திடீரென ஏற்படும் குறைபாடுகள் பொதுவானவை. ஆனால் இவை அனைத்தும் சரியாக இயங்குவதை முன்பே உறுதிசெய்தால், பின்னர் எந்த பிரச்சனையும் இருக்காது.

3. உங்கள் நேர்காணலைப் பயிற்சி செய்யுங்கள்:

உங்கள் சரளமான பேச்சாலும், திறமையாலும் நேர்காணல் எடுப்பவர்களை ஈர்க்க விரும்பினால் நேர்காணலுக்கு முன்னதாக பயிற்சி செய்வது மிக முக்கியம். நீங்களே ஒரு போலி நேர்காணலைப் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் திறமைகளை வீடியோ அழைப்பில் சிறப்பாக சித்தரிக்க முடியும். நீங்களே பதிலளிக்க கூடிய சில கேள்விகளை தயார் செய்து பயிற்சி பெறலாம். எனவே, ஒரு போலி நேர்காணலைப் பயிற்சி செய்ய உங்களுக்கு உதவ ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை அணுகலாம்.

4. திடீர் முடக்கங்களுக்கு தயாராக இருங்கள்:

துரதிர்ஷ்டவசமாக, உங்கள் இணைய சேவையில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் பதட்டப்பட வேண்டாம். இதுபோன்று குறைபாடுகளைத் தடுக்க நீங்கள் மற்றொரு இன்டர்நெட் வசதியை வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் மடிக்கணினி வேலை செய்வதை நிறுத்தினால் நீங்கள் எப்போதும் தொலைபேசி ஆடியோ அல்லது வீடியோ அழைப்பிற்கு மாறலாம்.

5.உடல் மொழி:

நேர்காணலின் போது நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நம்பிக்கையையும் உறுதியையும் காட்ட முகத்தில் புன்னகையை எப்போதும் வெளிப்படுத்துங்கள். வீட்டில் இருந்தாலும் கூட நேர்காணலின் போது, அதற்கேற்ப நேர்த்தியாக ஆடை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயக்கம் அல்லது பதட்டத்தின் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், கேமராவில் நேராகப் பாருங்கள் அல்லது வீடியோவில் தோன்றும் நபரை பார்க்கலாம்.

6. வீடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது பொறுமையாக இருங்கள்:

சில நேரங்களில் இன்டர்நெட் சேவை வீடியோ அழைப்பை தாமதப்படுத்தக்கூடும். இதன் விளைவாக நேர்காணல் நடத்துபவர் கேள்வியை முடிப்பதற்கு முன்பே நீங்கள் பதிலளிப்பீர்கள். இது பொறுமையின்மையின் அடையாளம் மட்டுமல்ல, அவமரியாதையும் கூட. எனவே, கேள்வி முடிந்ததும் தலையசைத்து, கேள்விக்கு பதிலளிக்கும் முன் ஒரு நொடி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழியில், எப்போது பதிலளிக்க வேண்டும் என்பதைக் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)