ஐக்கிய அரபு அமீரக நிதியமைச்சர் ஹம்தான் பின் ரஷீத் மறைவு


துபாய்:ஐக்கிய அரபு அமீரக நிதியமைச்சரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் உடலநலக்குறைவால் காலமானார்.

துபாய் பிரதமராக இருந்து வரும் முகமது பின் ரஷீத் அல் மக்துமின் சகோதரர் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் . இவர் கடந்த 1971-ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் நிதியமைச்சராகவும், 1995- ஆம் ஆண்டில் இருந்து துபாயின் துணை ஆட்சியராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தும் செவ்வாயன்று உடலநலக்குறைவால் காலமானார்.

இதுதொடர்பாக அவரது சகோதரரான முகமது பின் ரஷீத் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள்; அவர் நினைத்தால் நாம் இங்கு திரும்பி வரலாம். எனது சகோதரன், எனது துணை மற்றும் சகா பயணியே, கடவுள் உனக்கு கருணை காட்டட்டும்.' என்று பதிவிட்டுள்ளார்._