விக்கில் தங்கம் கடத்த முயன்றவர்கள் கைது!
துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அக்பர் அலியும் மற்றும் சென்னையை சேர்ந்த சுபையர் ஹாசன் ராபியுதீனும் அணிந்திருந்த ‘விக்’கை சோதனை செய்தபோது, 698 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பரிசோதனையில், அவர்கள் விக் அணிந்திருப்பதும், அதனுள் தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. 698 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பேஸ்ட் பாக்கெட்டுகள் அவற்றின் விக்கின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 595 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. இதே விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 622 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது
கடந்த இரண்டு நாட்களில் 5.55 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 2.53 கோடி எனவும் கூறியுள்ளனர். தங்கத்தை விதவிதமான முறைகளில் கடத்திவருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுவரை இந்த கடத்தல் தொடர்பாக ஆறு பேரை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்