சங்கரன்கோவில் நகரில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா வாக்கு சேகரிப்பு .



சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு .

நகர மக்கள் உற்சாக வரவேற்பு.

சங்கரன்கோவில் நகரில்  சுவாமி சன்னதி முன்பு திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா இன்று காலை வாக்கு சேகரிப்பை  தொடங்கினார் .

திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் உடன் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா சுவாமி சன்னதியில் இருந்து நடந்து சென்று ஊர்வலமாக தொடங்கி தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி /சங்கர்நகர், சங்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்கள் மத்தியில் பேசிய திமுக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா சங்கரன்கோவில் நகரில் அரசு மருத்துவமனை தரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது .

கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர் தொகுதியில் அரசு மருத்துவமனையில் எந்த வளர்ச்சியும் இல்லை. சங்கரன்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் விபத்துக்களில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடிய அவலம் இருக்கிறது.

சங்கரன்கோவில் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் எந்தவித உயர் சிகிச்சையும் கிடையாது.உயர்தர மருத்துவர்களும் இல்லை ,மருத்துவ வசதியும் இல்லை.ஆகவே தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தவுடன் தென்காசி மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் .


அறுவை சிகிச்சை, விபத்து சிகிச்சை,

இருதய சிகிச்சை,

குழந்தைகள் சிகிச்சை பிரிவு ,

கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த சிகிச்சை   பிரிவு என அனைத்து உயர் தரமான சிகிச்சைகள் வசதிகள் கொண்ட தரமான மாவட்ட தலைமை மருத்துவமனை சங்கரன்கோவிலில் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறோம்.

30 ஆண்டுகள் எந்த வசதியும் உருவாக்கப்படாத இந்த சங்கரன்கோவிலில் அடுத்து அடுத்து தொடர்ச்சியான வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி யோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். தளபதி அவர்களை முதல்வர் ஆக்குங்கள் என பேசினார்.

இந்த பிரச்சார பயணத்தில்

மதிமுக மாவட்ட 

 செயலாளர்

தி.மு. ராஜேந்திரன்,

மதிமுக நகர செயலாளர் ஆறுமுகச்சாமி,

துணைச் செயலாளர் ராஜமாணிக்கம்,

திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை,

இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள், டைட்டஸ் ஆதித்தன்,

அண்ணாவியப்பன்,

சங்கை சரவணன்,

இளைஞரணி சரவணன்,

பிரகாஷ்,

தகவல் தொழில்நுட்ப அணி குமார் ,

ராஜ், வர்த்தகர் அணி முத்துக்குமார்,

மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள்

அண்ணாமலை, சுப்புத்தாய்,

மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் , அப்பாஸ், ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் யோசப்,

தொமுச ஜெயராமன்,

பொருளாளர் லாசர்,

விடுதலை சிறுத்தைகள் தொகுதி பொறுப்பாளர் பீர் மைதீன்,

தமுமுக தீன் மைதீன்,

காங்கிரஸ் பிரமுகர்கள்

நகர செயலாளர் உமா சங்கர், சங்கரநாராயணன், பிச்சை,

தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்து மணிகண்டன்,

மாணவரணி பிரகாஷ்,

மாவட்ட பிரதிநிதி கணேசன்

வார்டு செயலாளர்கள் வெள்ளத்துரை ,

ஆச்சி ஆறுமுகம்,

இளங்கோ மாரியப்பன்,

 பால்பாண்டியன்,

 ராமகிருஷ்ணன்,

பிரதிநிதிகள் 

திருப்பதி வெங்கடாசலபதி,

 கடற்கரை கண்ணன்,

 சுந்தர்,

கணேசன்,

மகளிர் அணி  முத்தாத்தாள்மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களால் வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)