வாக்கு விற்பனைக்கு அல்ல வீட்டில் பிளக்ஸ் வைத்து விழிப்புணர்வு

 


தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை காமராஜர் நகர் 3ம் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பொன்னுசாமி. இவரது மகன் டாக்டர் பிரபு ராஜ்குமார். இவர்கள் தங்களது வீட்டின் முன் “ எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல “ என்ற வாசகம் தாங்கிய டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் கூறுகையில், வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்குகளுக்காக வேட்பாளர்கள் பணம் கொடுப்பது தவறானது. நாங்கள் எங்கள் ஓட்டுகளை விற்கவில்லை. வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவையில்லை . எங்களுக்கு தேவையானது சிறப்பான திட்டங்கள் முறையாக செய்து தரப்பட வேண்டும் என்பதே. பணம் வாங்காமல் வாக்களித்தால் தான் இந்த பகுதிக்கு தேவையான சுகாதாரம், தரமான கல்வி, சாலை வசதிகள், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெறமுடியும் .

வேட்பாளர்கள் பணம் கொடுப்பது எதற்காக என்பதை அறியாமல் ஒரு சில மக்கள் வாங்கிக் கொள்கின்றனர் . அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டால், அவர்கள் தவறுகள் செய்வதற்கு நாமே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்ற நிலை உருவாகும் , நாம் அவர்களிடம் எதையும் உரிமையோடு கேட்க முடியாது , இதனால் நம் சந்ததியினர் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தங்களது வாக்குகளை யாரும் விற்பனை செய்யாமல், உரிமைக்காக வாக்களிக்க வேண்டும் என்றனர் . இவர்களது இந்த முயற்சி இந்த பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)