இன்று தொடங்குகிறது அதிமுக வேட்பாளர் நேர்காணல்தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. 

இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று (04.03.2021) அதிமுக தலைமை நேர்காணல் நடத்துகிறது. மொத்தம் 7,967 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் நேர்காணல் நடத்தி முடிக்க இருக்கிறது அதிமுக. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், காலை 9 மணி முதல் இந்த நேர்காணலானது தொடங்குகிறது. இதனால் அதிமுக தலைமையகம் இருக்கும் ராயப்பேட்டை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் சசிகலா அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நேர்காணல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பனு கடந்த சில நாட்களாக கொடுத்து கொண்டிருந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு கொடுக்கும் நாள் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் வேட்பாளர்களின் நேர்காணல் தொடங்குகிறது

ஓபிஎஸ் ஈபிஎஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் இந்த நேர்காணலை நடத்தி உள்ளனர். கடந்த 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட நிலையில்

நேற்று மாலையுடன் 8640 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 26 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த முறை மூன்றில் ஒரு பங்குதான் விருப்பமனு தாக்கல்செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விருப்ப்மனு கொடுத்த 8640 பேர்களையும் இன்று ஒரே நாளில் நேர்காணல் செய்ய உள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

                       ‌

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)