லைசென்ஸ் இருந்தாலும் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படையுங்கள்!! சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு..

 


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் இருந்தாலும் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,300 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை காவல் எல்லைக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலை விட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை காவல் எல்லைக்குள் மொத்தம் 11,852 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 10 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த வாக்குசாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மூலம் வாக்குப்பதிவு நடப்பதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா