கட்சிப் பெயர் இல்லாமல் தேர்தல் விளம்பரம்?


தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 20 தொகுதிகளுள் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் திட்டவட்டமாக கூறுகின்றன. 

அதற்கு முக்கிய காரணம் பாஜகவின் தேர்தல் அறிக்கை தான். ஹிந்தி திணிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு என பாஜகவுக்கு எதிராக மக்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும், தமிழ்நாடு பெயர் மாற்றப்படும், மதமாற்றம் தடை செய்யப்படும் உள்ளிட்ட பாஜகவின் வாக்குறுதிகள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா, கட்சிப் பெயரை குறிப்பிடாமலும் பாஜக வேட்பாளர் என்பதை சொல்லாமலும் தேர்தல் விளம்பரம் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்கள் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருப்பதால், பாஜக வேட்பாளர் என்பதை சொல்ல விரும்பாமல் அவர் சின்னத்தை மட்டும் குறிப்பிட்டு விளம்பரத்தை வெளியிட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது.

மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக கட்சியையே ஹெச்.ராஜா புறக்கணித்து விட்டார் என பாஜக தொண்டர்கள் மன வேதனையில் இருக்கிறார்களாம்.

இதனிடையே, காரைக்குடியில் ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்களை, மீண்டும் அமல்படுத்துவேன் என ஹெச்.ராஜா வாக்குறுதி கொடுத்திருப்பது மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எப்படி இருந்த ஹெச்.ராஜா.. வாக்குகளை பெற கட்சி பெயரை புறக்கணிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறாரே என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்..!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்