சக்கர நாற்காலியில் சாலைப் பேரணி சென்ற மம்தா சூளுரை

 


மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. கடந்த 10ம் தேதி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே. கொல்கத்தாவில் உள்ள ஹஷ்ரா பகுதியில் தொடங்கி நடைபெற்ற பேரணிக்கு தலைமை தாங்கினார்.


பேரணியில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் , கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியின் போது, மம்தாவிற்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, மம்தா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனது வேதனையைக் காட்டிலும் மக்களின் வலியை அதிகமாக உணர்வதாகவும், தொடர்ந்து தைரியமாக போராடுவோமே தவிர கோழைகளுக்கு முன் மண்டியிடமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மக்களுக்கு எங்களுக்கு வாக்களித்தால், அவர்களுக்கு ஜனநாயகம் மீண்டும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். வங்கத்துக்கு எதிரான அனைத்து சதிகளும் முறியடிக்கப்படும். உடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் நான் பிரச்சாரம் செய்வேன் என்பதற்கு உறுதியளிக்கிறேன். ஆட்டம் தொடங்குகிறது. காயம்பட்ட புலிதான் மிகவும் ஆபத்தான் மிருகம்’ என்று தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா