ஐடி ரெய்டில் சிக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர்..

 


மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சோதனையில் ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி விரிவு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக உள்ளார். 

இவருக்கு  சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தினர்.

திருப்பூர், தரபுரம் மற்றும் சென்னை ஆகிய 8 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

சந்திரசேகரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அனிதா டெக்ஸ்காட் மற்றும் அனிதா ஹெல்த்கேர் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் அனிதா குழுமம், நூல் வர்த்தகம் மற்றும் பிபிஇ கருவிகள், பைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு கருவிகளை பல்வேறு மாநில அரசுகளுக்கான விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சாக்கு பை, சூட்கேஸ், பெட்டிகளில் ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரிடமிருந்து ரூ.11.50 கோடி கணக்கில் வராத பயணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)