திருட்டு வழக்கில் கைது செய்ய முயன்றபோது தேனி போலீசை தாக்கிவிட்டு உள்ளூர் தொலைக்காட்சி மூன் டிவி தாமரைக்கண்ணன் அவரது கூட்டாளிகள் தேனி எஸ்பி விடம் சொல்லிவிடுவேன் என மிரட்டிவிட்டு தப்பி ஓட்டம் தேனியில் பரபரப்பு.
தேனி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ள உள்ளூர் தொலைக்காட்சி மூன் டிவி உரிமையாளர் தாமரை கண்ணன் மீது மேலும் இரவில் கொள்ளையடித்த வழக்கு பதியப்பட்டுள்ளது அதைத்தொடர்ந்து உள்ளூர் தொலைக்காட்சி மூன் டிவி தாமரைக் கண்ணனை பிடிக்கச் சென்ற போலீசை தாக்கிவிட்டு பட்டப்பகலில் குற்றவாளி தப்பி ஓட்டம்.
உள்ளூர் தொலைக்காட்சி மூன் டிவி தாமரை கண்ணன் மீது விக்னேஷ் என்பவரை இரவில் தாக்கி அவரது பணம் பொருட்களை கொள்ளையடித்த வழக்கு ஒன்று தேனி காவல் நிலையத்தில் உள்ளது அதேபோல் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக பல நபர்கள் இடம் தேனி மாவட்டத்தில் பணம் வசூல் செய்து தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இப்பொழுது இரவில் கொள்ளையடித்த சம்பவம் உறுதி செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பிடிக்கச் சென்ற காவலரை தாக்கிவிட்டு உள்ளூர் தொலைக்காட்சி மூன் டிவி தாமரைக்கண்ணன் அவரது கூட்டாளிகள் தப்பி ஓட்டம் தலைமறைவாக உள்ள இவர்களை தேனி போலீசார் தேடும் பணியில் தீவிரம் தற்போது இவர் டிசிஎல் TCL Tv ஸ்டோர் ரூமில் பங்களா மேட்டில் வேலை செய்வதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து போலீசார் பிடிக்க சென்றபோது பட்டப்பகலில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தேனியில் பரபரப்பு.