பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது;ஜூனியர் விகடன் கணிப்பு..

 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. 

இதில், தி.மு.க கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று ஜூனியர் விகடன் கணித்துள்ளது.

அதேபோல், அ.தி.மு.க 48 இடம் கிடைக்கும் என்றும், அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது.

ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் மூன்று முக்கிய கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. 

அதில் எதிர்கால தமிழக அரசியலில் யார் முக்கியமான தலைவராக இருப்பார் என்ற கேள்விக்கு, 43,12 % பேர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எதிர்கால அரசியலில் முக்கிய தலைவராக இருப்பார் என தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு 29.20% பேர் தெரிவித்துள்ளனர்.

அடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராக, யார் வர வேண்டுமென விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 45.9 % பேர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும், 30.11 % பேர் எடப்பாடி பழனிசாமியையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு 70.89 % பேர் ஆம் என தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சி மீது மக்களிடையே வெகுவான அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க தோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)