நாடுவானில் திடீரென கதவை திறக்க முயன்ற நபர் ; ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பரபரப்பு..

 


டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வழக்கம்போல ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டது. 

அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் திடீரென்று ஒருவர், எமர்ஜென்சி கதவை பலவந்தமாக திறக்க முயன்றுள்ளார். இதைக் கண்டதும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், விமான பணியாளர்களும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியைப் பிடித்துள்ளனர்.

பின்னர், அந்த விமானம் அவசர அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 27, 2021 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆக்ரோஷமாக விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றார்" என்று தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்