பெண் எஸ்.பி. புகாருக்கு ஆளான டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரண

 


தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில்,  ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கடந்த 1 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்பட்டிருந்த சிலமணி நேரத்திலேயே, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில், தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் விசாரணைக்காக சி.பி.ஐ.டி அலுவகத்தில் ஆஜராகியுள்ளார். பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற இருக்கிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு