"காவல் நிவையத்தில் வைத்திருந்த மது பெட்டிய எலி தூக்கிட்டு போயிடுச்சு சார்"; போலீசாரின் பதிலை கேட்ட எஸ்.பி அதிர்ச்சி..

 


போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த 1,450 மது பாட்டில் பெட்டிகளை எலிகள் தூக்கிக் கொண்டு போய் விட்டதாக உபி போலீசார் கதை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஈடா மாவட்டத்தில் கோட்வாலி தேஹத் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக இந்திரேஷ்பால் சிங், ஏட்டாக ரிஷால் சிங் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் அப்பகுதியில் போலி மதுபானம் விற்றதாக மதுபான பாட்டில்கள் அடங்கிய 1,450 அட்டைப் பெட்டிகளை சிறப்பு போலீஸ் படை பறிமுதல் செய்தது. அவை, போலீஸ் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தது.இந்த பாட்டில்கள் அனைத்தும் மாயமாகி விட்டதாக மாவட்ட எஸ்பி உதய் சங்கர் சிங்குக்கு தகவல் வந்தது.

உடனடியாக, கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ஏட்டை அழைத்து விசாரித்த போது, அவ்வளவு மதுபாட்டில் பெட்டியையும் எலிகள் தூக்கிக் கொண்டு போய் விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு எஸ்பி.க்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது.

போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள டைரிக்குறிப்பில், 239 அட்டைப் பெட்டியை எலிகள் நாசம் செய்து விட்டதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத எஸ்பி, சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு  மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். 

இருவரும் உண்மையான காரணத்தை விளக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுபாட்டில் மாயமானதற்கு உபி போலீசார் கூறுவதை கேட்கும் போது, வடிவேலு சொல்ற மாதிரி, சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)