தொடர்ச்சியாக கோவிலில் தரிசனம் செய்யும் சசிகலா
அரசியலில் இருந்து விலகியிருக்க விரும்புவதாக கடந்த மார்ச் 3ம் தேதி சசிகலா அறிவித்தார், அதைத்தொடர்ந்து சசிகலா பிறந்த வைகுண்ட ஏகாதசியன்று சென்னை தி நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் அவர் கோயிலுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வெளியே வந்தான.
அது தொடர்ந்து கடந்த வாரம் தஞ்சாவூர் சென்றார் சசிகலா அவர் கணவர் நடராஜனின் நினைவிடம் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார் அதை தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலில் சசிகலா வழிபட்டார், அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை திருவொற்றியூரில் இருக்கும் வடிவுடையம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார் விடுதலை செய்யப்பட்டபோது அதேபோல பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய போதும் சொகுசு காரை பயன்படுத்தினார் சசிகலா. இந்த நிலையில் சசிகலா ஏற்கனவே பயன்படுத்திய ஹூண்டாய் i10 காரை மீண்டும் பயன்படுத்தி அந்த காரில் அவர் இன்று திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்திருந்தார்.
சமீப நாட்களாக சசிகலா தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார் என்பது அவர் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்பதும் அனைவருக்கும் தெரியும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் பல்வேறு கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார், பல்வேறு கோவில்களில் யாகங்கள் நடத்துவது சிறப்பு பூஜை செய்வது வழக்கமாக இருந்தது.
தற்போது அரசியலில் இருந்து விலகி இருக்கும் சசிகலா - அரசியல் களத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவரது ஆதரவாளர்கள் இது போன்ற கோவில்களில் அவரது வருகை வரும் நாட்களில் காணலாம்.