தேர்தல் நடத்தை விதிமீறல்களில் கரூர் மாவட்டம் முதலிடம்.


தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில் தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்திவருகிறது. அதனுடன் ‘சி.விஜில்’ எனும் செயலியை அறிமுக செய்து அதில், தங்கள் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சியினர் செயல்பட்டால் மக்கள் அதனை புகாராக தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி இன்றுவரை பதிவான விதிமீறல்களைக் குறித்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களில் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

‘சி.விஜில்’ செயலி மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்களில் கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 487 புகார்கள் வந்துள்ளன. அதில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை. இதற்கு அடுத்த இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. அம்மாவட்டத்திலிருந்து இதுவரை 365 புகார்கள் வந்துள்ளன. 

அதில் 284 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை தமிழகத்தில் ரூ. 265 கோடி அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)