ஆணையர் பிரகாஷ் வீட்டில் பண மூட்டைகள் பதுக்கல்; அரசு வாகனங்களில் வைத்து அதிமுகவினர் பட்டுவாடா!

 


தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களும் ஏதும் செய்திராத அதிமுகவினர் தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுத்து குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தை ஒட்டுமொத்தமாக பாஜக அரசுக்கு தாரைவார்க்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக தொகுதிக்கு ரூ.2 கோடி என அதிமுகவினர் விநியோகம் செய்வதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் பள்ளிக்கரணை வீட்டில் பட்டுவாடா செய்வதற்காக பண மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் செய்தி மையம் பகிரங்கமாக செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ். 2019 எம்.பி. தேர்தலின்போது, சென்னை மாநகராட்சி ஆணையராக மாறுதல் செய்யப்பட்டார். கடந்த இரண்டு வருடமாக, உள்ளாட்சித் துறையில் அதிகார மையத்தில் வலம் வரும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.க்கு அதி நவீன வீடு பள்ளிக்கரணையில் உள்ளது.

Prakash IAS

IRIS Jayachandra Apart-ments,

Jayachandra nagar 4thStreet, Jayachandra nagar,

Pallikaranai Chennai.

சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ரூ.2கோடி என 15 மண்டலங்களில் ரூ.30 கோடிக்கு போலி பில் போட்டு, அந்தந்த மண்டலங்களில் செயற்பொறியாளர்கள், மண்டல அதிகாரி மூலம் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.ஸின் பள்ளிக்கரணை வீட்டுக்கு பணம் கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.

பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.ஸின் பள்ளிக்கரணை வீட்டில் குவிக்கப்பட்டுள்ள பண மூட்டைகள், பணம் எண்ணும் மிஷின் மூலம் சிலர் ரூ.500 நோட்டுகளை தனியாகவும், ரூ.2000 நோட்டுகளை தனியாகவும் பண்டல் போட்டு, சென்னை மாநகராட்சிக்கு கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் பெயர்களை எழுதி வைக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 10 வாகனங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க, தினமும் பண மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. பண மூட்டை எந்தந்த தொகுதிக்குச் செல்லவேண்டும் என்ற பணிகளை தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட சில அதிகாரிகள் மேற்பார்வையிடுகிறார்கள்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு ஐ.ஏ.எஸ். பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.ஸின் பள்ளிக்கரணை வீட்டை அதிரடி ரெய்டு செய்வாரா?

♦♦ சென்னை மாநகராட்சி வாகனங்களை சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா....?

♦♦ வருமான வரித்துறை அதிகாரிகள் என்னதான் செய்கிறார்கள்....?

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)