சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி


 சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்பட்ட நிலையில் கிராம மக்களும் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜலெட்சுமி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட வல்லராமபுரம் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ராஜலெட்சுமி சென்றார்.

அப்போது அமைச்சர் ராஜலெட்சுமி ஊருக்குள் வர எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுகவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கிராம மக்களுடன் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றார். 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருக்கம் அதிமுக வேட்பாளருக்கு கருப்பு கொடி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்