சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அதிமுக பணப்பட்டுவாடா... வீடியோ வெளியாகி அதிர்ச்சி


 


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.

இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பசீர் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் வழங்கும் வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா